JavaScript seems to be disabled in your browser. For the best experience on our site, be sure to turn on Javascript in your browser.
இவ்வளங்களை எங்களோடு ஊழியத்தில் கூட்டாகப் பணிபுரிபவர்களே மொழிபெயர்த்திருக்கிறார்கள். நாங்கள் இவ்வளங்களை உங்களுக்கு இலவசமாகவே தருகிறோம் அதோடு இவற்றை மற்றவர்களும் தெரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்றே கேட்டுக் கொள்கிறோம், அவ்வகையில் அவர்களும் எங்களது இணையதளத்தில் இருந்து மொழிபெயர்த்துள்ள ஆதார வளங்களைப் பதிவிறக்கிக் கொள்ள முடியும். These resources have been translated by our ministry partners. We provide these resources to you for free and ask that you would let others know, so they too can download translated resources for free from our website.
இவ்வளங்களை எங்களோடு ஊழியத்தில் கூட்டாகப் பணிபுரிபவர்களே மொழிபெயர்த்திருக்கிறார்கள். நாங்கள் இவ்வளங்களை உங்களுக்கு இலவசமாகவே தருகிறோம் அதோடு இவற்றை மற்றவர்களும் தெரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்றே கேட்டுக் கொள்கிறோம், அவ்வகையில் அவர்களும் எங்களது இணையதளத்தில் இருந்து மொழிபெயர்த்துள்ள ஆதார வளங்களைப் பதிவிறக்கிக் கொள்ள முடியும்.
These resources have been translated by our ministry partners. We provide these resources to you for free and ask that you would let others know, so they too can download translated resources for free from our website.
Truth78 என்பது அடுத்த தலைமுறையினர் தேவனைத் தெரிந்து கொள்ளவும், மதிக்கவும், புதையலைப் போலத் தேடவும் செய்து, அவர்கள் தேவனுடைய மகிமைக்காக உண்மையுள்ள சீடர்களாக வாழும் வகையில், அவர்களது நம்பிக்கையை கிறிஸ்துவின் மீது மட்டுமே வைக்கவும் செய்யும் வகையில், அவர்களுக்கான தரிசனத்தை மையமாகக் கொண்ட ஊழியமாகும்.
எங்களது பணியே, மனதிற்கு அறிவூட்டி, இதயத்தை ஈடுபாடு கொள்ளச் செய்கிறதும், தேவனுடைய முழு ஆலோசனையை பிரகடனப்படுத்துவதன் வாயிலாக விருப்பத்தில் ஆதிக்கம் செலுத்துகிறதுமான வளங்களையும், பயிற்சியையும் கொண்டு ஆலயத்தையும், வீட்டையும், தயார்படுத்துவதன் வாயிலாக, அடுத்த தலைமுறையினரின் விசுவாசத்தைப் பேணி வளர்ப்பதேயாகும்.
நாங்கள், தேவனை மையமாகக் கொண்டதும், வேதத்தால் நிரம்பியதும், சுவிசேஷத்தை நோக்கியதும், கிறிஸ்துவை உயர்த்துகிறதும், ஆவி-சார்ந்ததும், போதனையில் இறங்கியது, சீஷத்துவம் சார்ந்ததுமான வளங்களைத் தயாரிக்கிறோம். எங்களிடம், ஆலயத்திலும், வீட்டிலும், அல்லது கிறிஸ்துவப் பாடசாலை அமைப்புகளிலும் வைத்து குழந்தைகளுக்கும், வாலிபர்களுக்கும் போதிப்பதற்கான பல்வேறு விதமான செய்திகள் இருக்கின்றன; அதோடு நாங்கள் பெற்றோர்களுக்கும், அவர்களை ஆயத்தப்படுத்தி, ஊக்குவிப்பதற்கான புத்தகங்களையும் தருகிறோம்.
கூடுதல் ஆதார வளங்களை மொழிபெயர்த்துத் தருவதில் நீங்கள் ஆர்வமுடையவராக இருந்தாலோ, அல்லது எங்களது ஆதார வளங்களைக் குறித்தோ அல்லது அவற்றை எவ்விதம் உபயோகிப்பது என்பது குறித்தோ உங்களுக்குக் கேள்விகள் இருந்தாலோ, தயவுசெய்து [email protected] என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வையுங்கள். மொழிபெயர்ப்பாளர்களை உபயோகித்து உங்களது கேள்விகளுக்குப் பதிலளிக்க, நாங்கள் எங்களால் ஆனதைச் செய்வோம்.
இச்செய்திகளை உங்களது குடும்பத்திற்காக, ஆலயத்திற்காக, பாடசாலைக்காக அல்லது ஊழியத்திற்காக அச்சிட்டுக் கொள்ளவும், உபயோகித்துக் கொள்ளவும் Truth78 அனுமதியளிக்கிறது. இவற்றை உங்களது ஸ்தாபனத்திற்கு வெளியே அல்லது குடும்பத்திற்கு வெளியே வினியோகிக்காமல் அல்லது இலாபத்திற்காக விற்பனை செய்யாமல் இருந்து கொள்ளலாம். ஆனாலும், தயவுசெய்து மற்றவர்களையும் எங்களது இணையதளத்திற்கு வரும்படி வழிகாட்டுங்கள், அவ்வகையில் அவர்களும் தங்களது பதிறக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இயேசுவின் உவமைகளில், மகிமையான, வாழ்க்கையை மாற்றிப்போடுகிற சத்தியம் இருக்கின்றது. ஆனாலும், தேவனுடைய சத்தியத்தின் அழகும், விலை மதிப்பும், பார்வையற்ற கண்களையும், பிரிவினையுள்ள இதயத்தையும் கொண்டவர்களுக்கு மறைவானதாக இருக்கிறது. இராஜ்ஜிய உவமைகள் குறித்த இந்த ஆய்வானது, ஆவிக்குரிய பார்வைக்கும், பிரிவினையற்ற இதயத்திற்குமான மூலாதாரமாக, தேவனை மட்டுமே உயர்த்துகிறது. இந்தப் பாடத்திட்டத்தின் குறிக்கோளே, குழந்தைகளில் ஆவிக்குரிய ஆர்வத்தைத் தட்டியெழுப்புவதும், அவ்விதத்தில் அவர்கள் தேவனுடைய புதையுண்டுள்ள பொக்கிஷங்களைத் தேடி, அவரில் தங்களது திருப்தியைக் கண்டடையச் செய்வதுமேயாகும். மறைந்துள்ள காரியங்கள் – என்ற இப்பகுதியை கோடைகால வேதாகமப் பாடசாலை அமைப்பில் கற்பிப்பதற்கு மிகவும் உகந்ததாகும்.
பதிவிறக்கத்திற்கான கோப்புகள் கிடைக்கின்றன
Loading...